Thursday, 19 January 2012

ATM - கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

என்னமோ தெரியல, இந்த வாரம் முழுக்க  வங்கி பத்தின விஷயமாவே காதுல விழுது. காலைல ATM ல பணம் எடுக்க போனப்ப சில பல விஷயங்கள் தோணிச்சி. அத பத்தி தாங்க இனிக்கி சொல்ல போறேன்.

ATM சென்ட்டர் உள்ள நாம போன சில தவறுகளை பற்றி தான் இந்த பதிவு. 

கும்பலா போககூடாதுன்னு அறிவிப்பு இருக்கும் (ஆனா நாம அங்க தான் நம்ப நட்பு, காதலிய விடு குடுக்காம போவோம்)

வெளிய எவ்ளோ பேர் காத்திருந்தாலும் நமக்கு என்னன்னு சிலர் இல்லாத "Balance" செக் பண்ணிட்டே இருப்பாங்க. 

சிலர் அப்ப தான் புதுசா கணக்கு தொடங்கினவங்கள கூட்டிட்டு வந்து ட்ரைனிங் குடுப்பாங்க. (எப்படி மெசின்ல இருந்து பணம் எடுக்குறதுன்னு)

சிலர் அங்க வந்து தான் சொந்த கதை, சோக கதை எல்லாம் போன்ல பேசிட்டு இருப்பாங்க. (போன் பேச கூடாதுன்னு போர்டு இருக்கும், அங்க இருக்குற செக்யூரிட்டி காட்டு கத்தலா கத்திட்டு இருப்பார் அது எல்லாம் காதுலையே விழாது)

இந்த மாதிரி நாம பண்றப்ப நமக்கே தெரியாம சில தப்பு நடக்குது, அது என்னன்னா 

முதல்ல நேரம் வீணாகுது

அவசரமா பணம் எடுக்க வேண்டி இருப்பவர்கள் பாதிக்க படுகிறார்கள் 

ATM ல இருந்து வெளிய வர பணம் 30 செகண்ட்க்கு மேல இருக்காது. அதுக்குள்ள வெளில எடுக்கலன்னா அது திரும்பவும் உள்ள போய்டும். சில மேதாவிகள் பணத்த கைல எடுக்காம, அக்கௌன்ட்ல மிச்சம் எவ்ளோ இருக்குன்னு ஸ்லிப்ப கைல வெச்சிட்டு பாத்துட்டு இருப்பாங்க, அதுக்குள்ள பணம் திரும்ப உள்ள போய்டும். அப்புறம் கஸ்டமர் கேர்,  வங்கி எல்லாத்துக்கும் அலைஞ்சி திரும்ப வாங்கணும். 

சிலருக்கு பணத்த எடுக்கற அக்கரை, ATM கார்டுகளை திரும்ப எடுக்கறதுல இல்ல. கார்ட மறந்து பொய் மெசின்ல விட்டுட்டு போய்டுவாங்க, ஒன்னு அது மெசின் குள்ள போய்டும், இல்லனா அடுத்து யாரது வந்தங்கான அவங்க எடுப்பாங்க, அது திரும்ப கிடைகிறது நம்ப அதிர்ஷ்டம் தான்னு சொல்லணும். 

இதில் மற்ற வங்கி ATM ல போட்ட திரும்ப வாங்கறதுக்கு கொஞ்சம் தாமதம் ஆகலாம், இதில் சில வங்கிகள் மற்ற வங்கி ATM கார்டுகளை திருப்பி தருவது இல்லை. 

இந்த மாதிரி இம்சைகள் நம்ம தலைல நாம்பளே மண்ண போட்டுக்கற மாதிரி, நமக்கு தான் இடைஞ்சல்.

இதே மாதிரி வங்கி தரப்புல இருந்தும் சில இடைஞ்சல்கள் இருக்கு, சில நேரத்துல மெசின் சரியாய் வேலை செய்யாது, பணம் இருக்காது, எல்லாம் சரியாய் இருந்தாலும் பணம் வெளில வராது, ஆனா நம்ப கணக்குல இருந்து கொறஞ்சி இருக்கும். கொஞ்சம் அனுபவம் இருப்பவர்கள் பதட்டம் அடையாமல் கஸ்டமர் கேர் செண்டர்க்கு போன் செய்து விவரம் சொல்லி சரி செய்து கொள்வார்கள்.

இது நகர வாசிகளுக்கு சரி, ஆனால் படிக்காத அல்லது இந்த அனுபவம் இல்லாத மக்கள் என்ன செய்ய முடியும். வங்கி தரப்பில் இதை பற்றி கொஞ்சம் யோசித்து கொஞ்சம் சுலபமாக எல்லா தரப்பு மக்களும் பயன் பெற செய்தால் நன்றாக இருக்கும்.

நம் அவசர தேவைகளை விரைவில் பூர்த்தி செய்து கொள்ள தான் இந்த சேவைகள், இதை சரியான முறைகள் பயன் படுத்தி கொள்வது நம் கையில் தான் உள்ளது.

இத்தோட இந்த பதிவை முடிசிக்கிறேன், கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்னு நீங்க சொல்றது கேக்குது. 




4 comments:

  1. //கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்னு நீங்க சொல்றது கேக்குது//


    ஹிஹிஹி..

    ReplyDelete
    Replies
    1. நன்றி இந்திரா, தங்களுக்கு பதில் பின்னுட்டம் போட கூட நேரம் இல்லை. அவ்ளோ வேலை (நெஜமா தாங்க, நம்புங்க) மேலும் இன்னும் கை வலி சரியாகாத காரணத்தினால், எழுதணும்ன்னு நினைகிறதை எழுத முடியவில்லை. மன்னிக்கவும்.

      Delete
  2. நீங்கள் இந்த ATM la இருந்து 11 ரூபாய் நோட்டை கண்டுபிடித்தீர்கள்...correct ah....

    ReplyDelete