Showing posts with label சுவைக்க. Show all posts
Showing posts with label சுவைக்க. Show all posts

Wednesday, 11 January 2012

பொங்கல் வந்தாச்சி

பொங்கல் வந்தாச்சி,  அதனால வீட்ல இருக்கிறவங்களுக்கு எதாவது புதுசா செஞ்சி அசத்தலான்னு  நினைகிறவங்களுக்கு என்னால முடிஞ்சா உதவிய செய்யலான்னு யோசிச்சப்ப ஒரு சூப்பர் ஐடியா தோணிச்சி ( முதல்ல ஐடியா வ சொல்லு அப்புறம் சூப்பரா இல்ல ..... னு அப்புறம் சொல்லோறேம்னு சொல்றிங்களா)

எல்லோர் வீட்லும் பொங்கல் செய்வாங்க. ஆனா அதுல எவ்ளோ வகை இருக்குனு சாப்பிடர நமக்கு தெரியும், ஆனா செய்றவங்களுக்கு தெரியுமா? எதோ என்னால முடிஞ்சா வரைக்கும் சொல்றேன், வீட்ல இருகிறவங்கள இம்சை பண்ணி செஞ்சி தர சொல்றது உங்க திறமை.


  1.  சர்க்கரைப் பொங்கல்
  2.  வெண் பொங்கல்
  3.  மிளகு பொங்கல்
  4.  சாம்பார்  பொங்கல்
  5.  ரவா  பொங்கல்
  6.  கார பொங்கல்
  7. ஆந்திரா பொங்கல் 


இந்த மாதிரி நிறைய இருந்தாலும், பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல் தான் செய்வாங்க. சிலர் வீட்ல வெண் பொங்கலும் சேர்த்து செய்வாங்க.

இது எல்லாம் எப்படி செய்றதுன்னு கேட்டிங்கன்னா சத்தியமா என்னக்கு தெரியாது.  நீங்க செஞ்சி சாப்பிடுங்க. நல்ல இருந்த எனக்கும் சொல்லிகுடுங்க.   மேல சொன்ன பொங்கல் எப்படி செய்றதுன்னு கூகிள் அண்ணாச்சி கிட்ட கேளுங்க, அவர் கண்டிப்பா பதில் சொல்லுவார்.

இந்த வருஷம் என்னால இது எல்லாம் சாப்பிட முடயுமான்னு தெரியல. கைல அடி பட்டத்தால கூட்டத்துல பயணம் செய்ய முடியாத நிலை. ஆனா கண்டிப்பா எதாவது ஒரு நண்பர் வீட்டுக்கு எனக்கு அழைப்பு வரும். வந்தா போய்ட வேண்டியது தான்( நாங்க எல்லாம் ப்ரீ ஆ கெடச்சா finail  கூட குடிப்போம்)



Thursday, 29 December 2011

பதநீர் (தெலுவு)

பதநீர்  பார்பதற்கு குளுகோஸ் தண்ணீர் போல் இருந்தாலும் குளுகோஸை விட சுவை மிக்கது.  நிறைய மருத்துவ குணம் கொண்டது. நகரங்களில் இருபவர்களை விட கிராம புறங்களில் இருப்பவர்களுக்கு இதை பற்றி நன்றாக தெரியும்.

பனை மரத்தின் கிளை என்னும் பாலையிளிருந்து பதநீர் எனும் தெலுவு கிடைக்கும், அதே தெலுவில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையானதாகவும், அதே நேரம் கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும். இது நம்மக்கு தேவை இல்லை நாம் வெறும் பதநீர் (அதாவது சுண்ணாம்பு சேர்த்து கிடப்பது) மட்டும் அருந்தலாம்.

நான் நகர வாசியாக இருந்தாலும் என் பள்ளி பருவங்களில் பதநீர் பருகியது உண்டு. அந்நாட்களில் ஒரு டம்பளர் 10 பைசாவுக்கு எனது தாத்தா வாங்கி தருவார். இப்பொது ஒரு சொம்பு பதநீர் ருபாய் 15  க்கு தான் கிடைக்கிறது. அது சரி விலைவாசி ஏற்றத்தை தான் தினமும் பார்கிறோமே.  அப்போதெல்லாம் மார்ச் முதல்  மே மாதம் வரை கிடைக்கும். இன்றைக்கு டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரை கிடைக்கிறது.  ஆனால் அன்றைக்கு இருந்த சுவை மற்றும் தூய்மை இப்பொது கிடைப்பது இல்லை. இருந்தாலும் உடல் குளுமை மற்றும் சில பல மருத்துவ குணங்கள் இருப்பதால் தாரளமாக உட்கொள்ளலாம். அதிலும் பதநீரில் இளம் நுங்கு போட்டு தருகிறார்கள் அதன் சுவையை அடித்து கொள்ள முடியாது.

இதில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி "நோய் தீர்க்கும் பதநீர்" என்ற தலைப்பில் நண்பர் "குனதமிழ்" தமிழ் தோட்டம் என்னும் இணையத்தில் ஒரு சிறு கட்டுரை எழுதிஉள்ளார். 

அழிந்து வரும் சுழலில் இருக்கும் பனை விவசாயம் பற்றி மற்றொரு நண்பர் "
இயற்கை வழி விவசாயம் என்னும் பதிவில் பகிர்ந்துள்ளார்.

பதநீர் மட்டும் அல்லாமல் பனை மரத்தில் இருந்து நாம் பெரும் சில பொருட்கள்

1 . பனை கிழங்கு

2 . பனம் பழம்

3 . நுங்கு

4 . சேவாய் (முற்றிய பணங்காயிலிருந்து சதை பகுதி)

5 . பனை ஓலை

இன்னும் தென்னை போல பல விதமாக பனை கூட நமக்கு பயனுள்ள ஓர் மரமாகவே இருக்கிறது. முடிந்த வரை இதன் பயன்பாட்டை அதிகரித்து இதன் அழிவை சரிவிலிருந்து மீட்க நம்மால் ஆனா முயற்சிகளை செய்யலாம்.

Tuesday, 27 December 2011

காபி வித் ஆர்ட்

 காபி குடுக்கறப்ப இப்படி குடுத்த எப்படிங்க குடிக்க மனசு வரும். ஆனா விலைய கேட்டிங்கன்னா உங்களுக்கு மயக்கமே வரும். இந்த மாதிரியான காபி எல்லா காபி ஷாப் கிடைக்குது. (அதுக்காக உங்க வீட்டுக்கு பக்கதுல இருக்குற டீ கடைல போய் இந்தமாதிரி காபி கேட்டின்கன்ன கண்டிப்பா சுடு தண்ணி எடுத்து மூஞ்சில ஊத்திருவங்க) விலை ஒரு கப் ருபாய் முப்பதுல இருந்து ஆரம்பிக்குது . நீங்க என்ன சொல்றிங்கன்னு கேக்குது. என்னடா ஒரு லிட்டர் பால் 33 ருபாய் தானே ஆனா ஒரு கப் காபி முப்பது ரூபாய்க்கு குடிக்கணுமா ? எப்படி செலவு செய்றதுன்னு தெரியாம இருக்கற நண்பன் கூட இருந்த கூட்டிட்டு போங்க.