தினமும் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம், அவர்களில் நமக்கு உதவும் நிலை சிலருக்கு இருக்கும், சிலருக்கு நாம் உதவி செய்யும் நிலை நமக்கு இருக்கும். அப்படி நம்மால் உதவும் நிலையில் இருக்கும் மனிதர்களை பற்றி தான் இந்த பதிப்பு.
ஆறு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு சின்ன சம்பவம். அப்போது நான் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பனியன்
கம்பெனியில் "கிராபிக் designer " ஆக வேலை செய்து கொண்டிருந்தேன். வேலை விஷயமாக சில நேரத்தில் வெளியே செல்வது உண்டு. (இதுக்கு தனியா பைசா தரமாட்டாங்க, நாம தான் செலவு செய்யனும்)
ஒரு இரவு நேரத்தில், வேலை முடித்து வீடு திரும்பும் நேரத்தில் (கொஞ்சம் பசி வேறு) எதாவது சாப்பிடலாம் என்று தோனவே, பண பையை பார்த்தேன் (அதாங்க purse ), நீ வெச்சிருக்கிற 5 - 10 க்கு இது வேற வேணுமான்னு நீங்க முனுமுனுக்கறது எனக்கு நல்லாவே கேக்குது. நெனச்ச மாதிரி 8 ருபாய் சில்லறை மட்டும் தான் இருந்தது (என்ன பண்றது அப்போ சம்பளம் கம்மிதாங்க) இப்ப தான் "டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு" ன்னு குடுக்கற எல்லா கார்டும் வாங்கி வெச்சிருக்கேன்.
சரி நம்ப விஷயத்துக்கு வருவோம், பக்கதுல ஒரு சின்ன கடை இருந்தது, சூடா பஜ்ஜி, பட்டாணி இந்தமாதிரி சாப்பிடும் கடை அது. நமக்கு பஸ்க்கு 2 ரூபா தான். பாக்கி 6 ரூபா இருக்குல, அது எதாவது லைட் ஆ சாப்பிடலாம் யோசிச்சிட்டு இருந்தப்ப ( 6 ரூபா தண்டா என்னமோ 600 ரூபாய்க்கு எதோ வாங்க போறமாதிரி யோசிக்கறனு திட்ற "mindvoice" எனக்கும் கேக்குது.
பரிதாபமான ஒரு குரல், எதாவது தர்மம் பண்ணுங்கன்னு கேட்டுச்சி. பாக்க ரொம்ப பாவமா இருந்ததாலும், நம்ப வீட்டுக்கு தானே போறோம் அதுக்குள்ள இத சாப்பிடாட்டி என்னனு நெனச்சி, இருந்த காசுல ஒரு 5 ருபாய் நாணயத்தை (நம்புங்க நா தர்மம் பண்ணேன்) அவங்களுக்கு குடுத்துட்டு, நேர போய் பஸ் ஸ்டாப்ல பஸ் வரதுக்காக காத்திருந்தேன்.
அப்பதாங்க அந்த சம்பவம் நடந்தது. என்கிட்ட உதவி கேட்ட அந்த நபர் அந்த பஸ் நிறுத்தத்துக்கு பக்கதுல வந்து ஒரு ஆட்டோல ஏறி போனாங்க. கொஞ்சமல நேரியவே ஷாக் அடிச்ச மாதிரி இருந்தது. பக்கதுல இருந்த இன்னொரு ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரிச்சப்ப, அவர் சொன்னது ஷாக் அடிச்சதுல தேள் கொட்டினா எப்படி இருக்குமோ அப்படி இருந்திச்சி.
அந்த நபர் ஆட்டோ ஓட்டுனருக்கு தினசரி வடிக்கையாளராம், பிறரிடம் இருந்து இப்படி உதவி கேட்டே தினமும் பிழைப்பை நடத்துகிறார் என்றும், தினமும் குறைந்தது 250 ருபாய் சம்பாதிக்கிறார் என்றும் சொன்னார். தினம் போக வர ஆட்டோ, இரவு நேரத்தில் "டாஸ்மாக்" என்று சந்தோசமாக வாழ்கை நடத்துவதாக சொன்னார். நல்ல வேளை நா காசு குடுத்ததா சொல்லல. சொல்லிருந்தா அங்கேயே காரி துப்பிருப்பார். அடுத்து பதிலா தான் நீங்க இப்ப துப்ப போறீங்க.
அதுக்கு அப்புறம் இந்த மாதிரி உதவி பண்ணறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிப்பேன்.
இந்த சம்பவத்துக்கு அப்புறம் தான் எப்படி உதவி செய்யறதுன்னு கத்துகிட்டேன். நீங்களும் கத்துகோங்க.
முடிந்தவரை பண உதவி செய்வதை தவிர்க்கவும்.
அவர்களுக்கு என்ன தேவைன்னு கேட்டு அதை மட்டும் செய்யலாம்.
உடல் உறுப்புகள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ங்க
இந்த மாதிரி நிறைய வழி இருக்கு, நா உதவி செஞ்ச மாதிரி இல்லாம கொஞ்சம் யோசிச்சி செய்யுங்க.

No comments:
Post a Comment