Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

Tuesday, 24 January 2012

பதினோரு ருபாய் நோட்டு

தினமும் பைக்ல ஆபீஸ்க்கு போய்ட்டு வருவது கொஞ்சம் கடியா இருக்குனு கொஞ்சநாள் பஸ்ல போலனுன்னு முடிவு பண்ணி பஸ்ல போக ஆரம்பிச்சேன். நமக்கு தான் பிரச்சனை பிளான் பண்ணி முன்னாடி வந்து நிக்குமே. (பெட்ரோல் விலை ஏறி போச்சின்னு பஸ்ல வரது ஆபீஸ்ல கொஞ்சம் பேருக்கு தெரியும். இத படிக்கறப்ப கண்டிப்பா கொஞ்சம் கலாய்பாங்க.)

இப்ப நம்ப மேட்டர் என்னன்னா "பதினோரு ருபாய் நோட்டு" இது எதுக்குன்னு கேக்கறிங்களா, முழுசா படிச்சா நீங்களே எனக்கு விழா எடுப்பிங்க (நீ முதல்ல விஷயத்த சொல்லு, உனக்கு விழா எடுக்கறதா, இல்ல உன் விலா எலும்ப எடுக்கறதங்கன்னு இத எழுதறப்பவே ஒரு புண்ணியவான் பின்னாடி இருந்து சொல்லிட்டார். எல்லோருக்கும் சந்தோசமா இருக்குமே )

வீட்ல இருந்து ஆபீஸ்க்கு வர்றதுக்கு பதினோரு ருபாய் பஸ் டிக்கெட். தினமும் சரியாய் சிலரை கொண்டு போக முடியமா? ஒருநாள் சரியா கொண்டுபோவேன், ஒரு நாள் இருபது ருபாய் கொண்டு போவேன், ஒருநாள் பனிரெண்டு இப்படி தான் முடிஞ்சவரைக்கும் சில்லறை கொண்டு போவேன், இதுல 12 ருபாய் கொண்டு போறப்பவும் 15 ருபாய் கொண்டு போறப்பவும் தான் பிரச்னை.

நடத்துனர் இருக்காரே அவர் கிட்ட 12  ரூபா கொடுத்து 11 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிட்ட, மீதி ஒரு ரூபாய்க்கு நாம 10 தடவைக்கு மேல கேக்கணும். அப்பவும் சில நேரத்துல அது வராது. கூட பஸ்ல வரவங்க எல்லாம் கொஞ்சம் கேவலமா பாப்பாங்க.

அவங்க பைசா போன தானே தெரியும், அப்ப எப்படி கேவலமா லுக் விடறதுன்னு. இந்த மாதிரி சில்லறை பிரச்சினை வராம இருக்க நானே சிந்திச்சி ஒரு வழி கண்டுபிடிச்சிட்டேன். அது தான் இந்த 11 ரூபா. இந்த மாதிரி எங்க எங்க சிலரை பிரச்சினை இருக்குதோ அந்த தொகையை ஒரு ருபாய் நோட்டா பிரிண்ட் அடிச்சிட்டா, நமக்கும் பிரச்சினை இல்லை, நடத்துனர் பயணிகள் உறவும் சண்டை இல்லாமல் போகும்.


எனக்கு முதல் பிரச்சினை இந்த 11 ரூபா தாங்க. அதனால இதப்பத்தி ரிசர்வ் வங்கி கவர்னர் கிட்ட பேசி சீக்கிரமா  இந்த 11 ருபாய் நோட்டை வெளியிட்டு மக்கள் பிரச்சினை தீர்க்க சொல்ல போறேன். இதுக்கு அரசாங்கத்துல யாராது பெரிய ஆளுங்கள தெரிஞ்சவங்க இருந்தா எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க. அவங்க டிசைன் பண்ண, பிரிண்ட் பண்ண ஆகும் கால தாமதிற்காக அதையும் நானே தேடி கண்டுபிடிச்சி இந்த பதிவுடன் இணைத்து இருக்கேன். 


நா கண்டு பிடிச்சதுன்ன, கூகிள் கிட்ட இருந்து சுட்டது தாங்க (பின்னாடி எந்த பிரச்சினையும் வராம இருக்கனும்ல ).  என்ன மாதிரியே உங்களும் சில்லறை பிரச்சினை இருந்த நீங்களும் இந்த மாதிரி அரசாங்கத்துக்கு உங்களால முடிஞ்சா ஆலோசனைகளை வழங்கி அவங்க குடுக்கறத வாங்கிகோங்க. 



சில நல்ல நடத்துனர்களும் இருக்காங்க, என்னோட "PEN DRIVE" ஒரு நாள் பஸ்ல காணாம போச்சி. அத அவர் எடுத்து வெச்சி நா அடுத்த நாள் வரப்ப என்கிட்ட பத்திரமா குடுத்தார். அதுல இருந்து அவர நா அப்பான்னு தான் கூப்பிடுறேன். அந்த அளவுக்கு நல்ல மனிதர். இன்னும் சில நடத்துனர்கள் சில்லறை இல்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு குடுங்கன்னு சொல்கிறார்கள். இப்படி சில நல்ல மனிதர்களும் இருக்காங்க. அவர்களுக்கு நடுவில் இப்படி சில்லறைக்காக இருப்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. ஒன்று அரசாங்கம் பஸ் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யும் போது இப்படி சில்லறை இல்லாமல் முழு தொகையாக அறிவிக்கலாம். அப்போது தான் நமக்கு இந்த மாதிரி தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

Wednesday, 28 December 2011

என் பங்குக்கு நானும்

நிறைய எழுதலன்னு நினைப்பேன். ஆனா எந்த தலைப்புல எழுதனும்னு நெனச்சனோ அது மறந்து போய்டுது. அதனால எழுதனும்னு நினைக்கிறவங்க உடனே எழுதிருங்க.....

யோசிச்சு  யோசிச்சு என்ன எழுதலாம்னு கண்டு பிடிச்சிட்டேன். நிறைய பேர் எழுதிருப்பங்க. என் பங்குக்கு நானும் ( கண்டுக்காம படிங்க )

பிளாஸ்டிக் குப்பைகளை பற்றி தான் இன்றைக்கு எழுத போகிறேன்.

ஏன் குப்பை போடரிங்கனு கேக்கல, எப்படி அதை தவிர்க்கலாம்ன்னு சொல்றேன்.

நாம அன்றாடம் பயன்படுத்தும் பொருளா ஆய்டிச்சி பிளாஸ்டிக்.

1 . பால்
2 . மளிகை
3 . காய் கறி
4 . தின்பண்டங்கள்

இதர வீட்டுக்கு தேவையான பொருட்கள் எல்லாமே பாலிதீன் கவர் இல்லாம வருவது இல்ல.

நாம் அதை பயன் படுத்தும் விதம் தான் தவறாக உள்ளது. பிளாஸ்டிக் பைகளை உடைத்து அதில் உள்ளவற்றை வெளியே எடுக்கும் போது இருக்கும் கவனம் அதற்க்கு பிறகு இருப்பது  இல்லை.

நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். இவ்வாறு வீட்டிக்கு வரும் பிளாஸ்டிக் பைகளை ஒரு இடத்தில் சேமித்து வையுங்கள். ஒரு மாதம் மட்டும் இப்படி சேமிக்கும் போது நாம் தேவை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பைகளின் அளவை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

இப்படி செய்வதால் தேவை இல்லாமல் வெளியில் வீசப்படும் பிளாஸ்டிக் குப்பைகளின் அளவும் குறையும். இவ்வாறு சேமிக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கி கொள்வதருக்கு சில அரசு மற்றும் சில தன்னார்வ தொண்டு நிறுவங்களும் உள்ளன.

சில மாநகராட்சிகள் இதற்காக தனி பைகளை வழங்கி உள்ளன. சுற்று சூழலால் பாதிக்க போவது நாம் மட்டும் அல்ல நமக்கு பின்னால் வரும் சந்ததிகளும், சில ஜீவராசிகளும் தான். ஆரம்ப காலத்தில் எல்லாமே சிரமமாக தான் இருக்கும். ஒரு மாத காலம் நமக்கு இந்த பழக்கத்தை நடைமுறைக்கு கொண்டுவர உதவியாக இருக்கும்.  அதன் பிறகு இது நம் அன்றாட செயல்களில் ஒன்றாக ஆகிவிடும்.

என்னடா இவ்ளோ சொல்றனே இவன் எப்படின்னு கேக்கறது எனக்கும் கேக்குது, நா கடந்த 6 மாத காலமா இத தவறாம செஞ்சிட்டு இருக்கேன். இப்படி சொல்றதுக்கு நாம தகுதியனவனா இருந்த தான அடுத்தவங்கள செய்ய சொல்ல முடியும்.

பொதுநலமா இத யோசிக்காம, சுய நலமா இத யோசிங்க கண்டிப்பா செய்ய முடியும்.

இந்த வருடம் புது வருட உறுதிமொழியா  இதுவும்  இருக்கட்டும் .