பதநீர் பார்பதற்கு குளுகோஸ் தண்ணீர் போல் இருந்தாலும் குளுகோஸை விட சுவை மிக்கது. நிறைய மருத்துவ குணம் கொண்டது. நகரங்களில் இருபவர்களை விட கிராம புறங்களில் இருப்பவர்களுக்கு இதை பற்றி நன்றாக தெரியும்.
பனை மரத்தின் கிளை என்னும் பாலையிளிருந்து பதநீர் எனும் தெலுவு கிடைக்கும், அதே தெலுவில் சுண்ணாம்பு அடிக்காமல் விட்டால் அது சுவையானதாகவும், அதே நேரம் கொஞ்சம் போதையுடன் கூடிய இயற்கையான கள் என்ற பானம் கிடைக்கும். இது நம்மக்கு தேவை இல்லை நாம் வெறும் பதநீர் (அதாவது சுண்ணாம்பு சேர்த்து கிடப்பது) மட்டும் அருந்தலாம்.
நான் நகர வாசியாக இருந்தாலும் என் பள்ளி பருவங்களில் பதநீர் பருகியது உண்டு. அந்நாட்களில் ஒரு டம்பளர் 10 பைசாவுக்கு எனது தாத்தா வாங்கி தருவார். இப்பொது ஒரு சொம்பு பதநீர் ருபாய் 15 க்கு தான் கிடைக்கிறது. அது சரி விலைவாசி ஏற்றத்தை தான் தினமும் பார்கிறோமே. அப்போதெல்லாம் மார்ச் முதல் மே மாதம் வரை கிடைக்கும். இன்றைக்கு டிசம்பர் மாதம் முதல் மார்ச் வரை கிடைக்கிறது. ஆனால் அன்றைக்கு இருந்த சுவை மற்றும் தூய்மை இப்பொது கிடைப்பது இல்லை. இருந்தாலும் உடல் குளுமை மற்றும் சில பல மருத்துவ குணங்கள் இருப்பதால் தாரளமாக உட்கொள்ளலாம். அதிலும் பதநீரில் இளம் நுங்கு போட்டு தருகிறார்கள் அதன் சுவையை அடித்து கொள்ள முடியாது.
இதில் இருக்கும் மருத்துவ குணங்களை பற்றி "நோய் தீர்க்கும் பதநீர்" என்ற தலைப்பில் நண்பர் "குனதமிழ்" தமிழ் தோட்டம் என்னும் இணையத்தில் ஒரு சிறு கட்டுரை எழுதிஉள்ளார்.
அழிந்து வரும் சுழலில் இருக்கும் பனை விவசாயம் பற்றி மற்றொரு நண்பர் "இயற்கை வழி விவசாயம் என்னும் பதிவில் பகிர்ந்துள்ளார்.
பதநீர் மட்டும் அல்லாமல் பனை மரத்தில் இருந்து நாம் பெரும் சில பொருட்கள்
1 . பனை கிழங்கு
2 . பனம் பழம்
3 . நுங்கு
4 . சேவாய் (முற்றிய பணங்காயிலிருந்து சதை பகுதி)
5 . பனை ஓலை
இன்னும் தென்னை போல பல விதமாக பனை கூட நமக்கு பயனுள்ள ஓர் மரமாகவே இருக்கிறது. முடிந்த வரை இதன் பயன்பாட்டை அதிகரித்து இதன் அழிவை சரிவிலிருந்து மீட்க நம்மால் ஆனா முயற்சிகளை செய்யலாம்.

No comments:
Post a Comment