Thursday, 14 June 2012

குழந்தைகளுடன்

போன வாரம் தோழி ஒருவரின் தம்பி திருமணதிற்கு போக வேண்டி இருந்தது. சரி போலாமேன்னு சனிக்கிழமை மதியம் ரெயில்ல கெளம்பினேன். பஸ்ல போறதா விட ரயில் பயணம் கொஞ்சம் நல்ல இருக்கும். அதவிட பஸ்ல போறத காட்டிலும் ரயில் கட்டணம் ரொம்பவே குறைவு. பஸ்ல 96 ரயில்ல 56 அதுபோக டவுன் பஸ்ல தனி.

சரி நா மேட்டர்க்கு வரேன். ட்ரைன்ல ரீசெர்வ் பண்ணி போறதா விட ஜெனரல் கம்பர்ட்மென்ட்ல போறது கொஞ்சம் ஜாலி தான். டிக்கெட் வாங்க கூட்டம் இருக்கும் அதனால பக்கதுல இருக்குற ஒரு ரயில்வே ஸ்டேஷன் ல டிக்கெட் வாங்கிட்டேன். அதனால கொஞ்சம் மெதுவா போய் கூடத்துல அடிச்சிக்காம ஒரு ஜன்னல் சீட் பிடிச்சி அப்பாடான்னு உக்காந்தேன்.

பக்கத்துக்கு சீட்ல ஒருத்தர் அவர் குழந்தைகளோட வந்தார். சீட்ல அவங்கள உக்கார வெச்சிட்டு அவர் கீழ இறங்கி போய்ட்டார். பக்கதுல இருந்தவங்க கிட்ட ஏதும் சொல்லல. அவர் குழந்தைகள்ள ஒரு பொண்ணு 5 வயசு இருக்கலாம். ஒரு பையன் 3 வயசு இருக்கும். கொஞ்ச நேரத்துல அந்த சின்ன பையன் அழ ஆரம்பிச்சிட்டான். நா ஏதும் பண்ணல, அவங்க அப்பாவ காணோம்ன்னு தேட ஆரம்பிச்சி அது அழுகைல வந்து நின்னது.

நமக்கே கொஞ்சநேரம் அம்மாவை காணலன்ன ஒரு மாதிரி ஆய்டும்ல. அந்த பிஞ்சு குழந்தையின் நிலைமைய யோசிச்சி பாருங்க. அந்த பொண்ணு கொஞ்சம் அமைதியா இருந்தது. ஒரு 10 நிமிசத்துல அதுவும் அழுகற மாதிரி முகமெல்லாம் ஒருமாதிரி சோகமா ஆய்டிச்சி. பக்கதுல இருக்குற யார் பேசினாலும் அழுகை மட்டும் தான் பதில்.

அப்புறம் கொஞ்சம் சமாதனம் பண்ணி உங்க அப்பா போன் நம்பர் சொல்லு போன் பண்ணி பேசுன்னு ஒரு 5 தடவ சொன்னதுக்கு அப்புறமா தான் போன் நம்பர் சொல்லிச்சி. போன் பண்றதுக்குள அவங்க அப்பாவும் அம்மாவும் வந்துட்டாங்க. உடனே ட்ரைன் நகர ஆரம்பிச்சது.

அவர் மனைவிய கூப்பிட போனதா சொன்னார்.இதுமாதிரி போறப்ப பக்கதுல சொல்லிடு போன கொஞ்சம் நல்லது. அப்படி இல்லன்ன கூட போன் பண்ணி வரசொல்லிட்டு கோச்க்கு வெளில வெயிட் பண்ணலாம். இவங்கள தேடி குழந்தைங்க வெளிய போன என்ன ஆகறது. இல்ல வண்டி கெளம்பிட்ட என்ன பண்ண முடியும். இதுல அந்த பிஞ்சுகளுக்கு தமிழ் தெரியல, மலையாளம் மட்டும் தான் தெரியும் போல.

அவர் செய்த ஒரு நல்ல விஷயம் என்னா, அவர் பொண்ணுக்கு அவரோட போன் நம்பர் சொல்லி குடுத்திருக்கார். அதனால கொஞ்சம் பயம் இல்ல. இருந்தாலும் குழந்தைகள் விசயத்துல கொஞ்சம் முன் ஜாக்கிரதையா இருப்பது நல்லது தானே.


Sunday, 3 June 2012

குழந்தையோட போறப்ப

போன வாரம் சனிக்கிழமை ஒரு அவசர வேலைக்காக ஆபீஸ்க்கு வர வேண்டி இருந்தது. எப்பவும் சனிகிழமை லீவ் தான். யாரும் வரமாட்டாங்க, அதனால நாம கொஞ்சம் மெதுவா கெளம்பி வந்தேன்.

வர்ற வழில ரெண்டு இடத்துல சிக்னல் இருக்கும். அதுல ஒரு சிக்னல்ல ஒரு பொண்ணு அவங்க குழந்தையோட வண்டில வந்தாங்க. அவங்களும் நான் போற வழில தான் போனாங்க.


அவங்க குழந்தை பின் பக்கமா உக்கார வெச்சிருந்தாங்க, அவங்க கொஞ்சம் குண்டு வேற. அந்த குழந்தை ஒரு பக்கமா சாஞ்ச மாதிரி உக்காந்திருந்தது.


உடனே அவங்கள நிறுத்தி விஷயத்த சொன்னேன். இதில அவங்க தலைக்கு ஹெல்மெட் வேற போட்ருந்தாங்க. அந்த குழந்தை கூப்பிட்ட கூட அவங்களுக்கு கேக்காது.


பொதுவா குழந்தைகள் இந்த மாதிரி வண்டில போறப்ப கொஞ்ச நேரத்துல தூங்க ஆரம்பிச்சிடும். இந்த மாதிரி நேரத்துல நாம கூட ஒருத்தர துணைக்கு கூட்டிட்டு போலாம். அப்படி முடியதவங்களுக்கு சில யோசனைகள்.


வண்டி ஓட்டும் பெண்கள் நிறய பேர் சுடிதார் தான் போடறாங்க, அதன் துப்பட்டா வுடன் சேர்த்து குழந்தைகளை இடுப்பில் கட்டி கொள்ளலாம் ( இது என் அருமை தங்கை சொல்லிக்குடுத்த யோசனை)


இதுக்காகவே சில  ஜாக்கெட் விக்குது, அதை முன்புறம் அல்லது நமக்கு பின் புறம் மாடி அதில் குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு செல்லலாம்.


இதுக்கு எல்லாம் வசதி இல்லனா முடிந்தவரை வண்டி முன்புறம் நமது கால்களுக்கு இடையில் குழந்தகைளை வைத்து கொள்ளலாம்.


இது பெண்களுக்கு மட்டும் இல்லங்க, ஆண்களுக்கும் தான். முடிந்தவரை குழந்தைகளை கொண்டு செல்லும் பொது கியர் இல்லாத வாகனகளை உபயோகிக்கவும். கியர் இல்லாத வாகனகள் ஒரு கையில் சுலபமாக இயக்க முடியும்.


இந்த மெசேஜ்க்கு சரியான படம் கிடைக்கல அதனால தான் ரொம்ப லேட். அது இல்லாம 2 மாசமா ஆபீஸ்ல ஷிப்ட் டைம் மாத்தினால எதுமே எழுத முடியல. இல்லைனா மட்டும்  நீ எழுதற லட்சணம் எங்களுக்கு தெரியாதான்னு நீங்க துபரதுக்குள்ள நா ஜூட்.


சாம கோடங்கி மாதிரி இரவு மட்டும் போயிட்டு வர்ற வேல இப்ப கொஞ்சம் மாறி மதியம் போயிட்டு, நடு சாமத்துல தெரு நாய் தொரதுரதுல இருந்து தப்பிச்சி பத்திரமா வீட்டுக்கு வந்து சேரதுக்குள்ள ........ ஆவ்வ் .....