Monday, 9 July 2012

திருட்டு

திருட்டு போன உங்களோட பொருட்கள்ல எதாவது திரும்ப கிடைச்சா  உங்களுக்கு எப்படி இருக்கும். அது செல் போன் திரும்ப கெடச்சா உங்களுக்கு எப்படி இருக்கும்.

ஆமாங்க திருட்டு குடுக்கற பொருள்ல இப்ப செல் போன் தான் முதல் இடத்துல இருக்கு. ஏன்ன விக்கிறது ரொம்ப சுலபம். ஒளிச்சி வெய்கவும்  சுலபம்.

இதுல இருந்து நாம தப்பிக்க நிறைய வழிகள் இருக்கு. நாம யாரும் உபயோகிக்கறது இல்ல. கொஞ்சம் மெனக்கெட்டு செய்யவேண்டிய வேலை தான். ஆனா காஸ்ட்லியான செல்போன் நமக்கு முக்கியம் இல்லையா. அதனால கொஞ்சம் நேரத்தை செலவு செஞ்ஜா தப்பு இல்லன்னு தோணுது.

முதல்ல கதை அப்புறம் தான் கருத்து. ஏன்னா முதல்ல கருத்து சொன்னா பய புள்ளங்க ப்ரௌசெர்ல நம்ப ப்ளாக் இருக்குற பக்கத்துக்கு தல இல்ல கால் கூட வெச்சி படுக்க மட்டேன்கரங்க. இதுக்கு சாட்சி என் வலை தளத்தில் இருக்குற பதிவுகளும் அதன் பின்னுட்டமும் தான். சரி கதைக்கு வருவோம்.

கதை 1:

இது நடந்தது பெங்களூர். நண்பரும் அவர் மனைவியும் ஆட்டோல வீட்டுக்கு வரும்போது மொபைல் போன் ஆட்டோல  தவறி விழுந்துடிச்சி. அது அவங்க ரெகுலரா வர ஆட்டோ. போன் தொலைஞ்ச உடனே அவங்க ஆட்டோ ஓட்டுனர் கிட்ட கேட்டிருகாங்க, அவர் போன் எடுத்தும் ஆட்டோல இல்லன்னு சொல்லிட்டார். நண்பரும் ரெகுலர் ஆட்டோகாரர் பொய் சொல்ல மாட்டார், அதனால போன் வேறு எங்கயோ தொலைஞ்சி போச்சின்னு நெனச்சி விட்டுட்டார். ஒரு சில நாள் கழிச்சி அவரோட முக புத்தக அதாங்க "FACEBOOK" அந்த ஆட்டோ ஓட்டுனர்  போட்டோ ஒன்று புதிதாக upload  செய்யபட்டிந்தது. நண்பருக்கு அப்போது தான் நினைவு வந்தது. அந்த செல் போனில் எடுக்கப்படும் படங்கள் அனைத்தும் facebook இல் upload  செய்யும்படி செய்தது நினைவில் வந்தது. அந்த ஆட்டோ ஓட்டுனர் போட்டோவை ஒரு பிரிண்ட் எடுத்து அவரிடம் சென்று கொஞ்சம் மிரட்டி கேட்டபோது போன் இருப்பதை ஒத்துக்கொண்டார்.


கதை 2:

நடந்த இடம் கோவை. உடன் பணி புரியும் சகோதரன் ஒருவன் தன் செல் போன் தொலைத்துவிட்டான். அதை கண்டு பிடிக்க காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்திருந்தான் .  சில மாதங்களில் அதை  பற்றிய நினைவுகள் மறந்து போன சமயத்தில், அவனுடைய செல் போன் எண்ணிற்க்கு ஒரு குறுஞ்செய்தி (அது தாங்க SMS) வந்தது. அவன் தொலைந்து போன செல் போனில் வேறு எந்த சிம் கார்டு போட்டாலும் அவனுடைய போன் நம்பர்க்கு sms வரும்படி எதோ செய்திருக்கிறான். தொலைந்து போன செல் போன் யாரிடமோ கிடைக்க அவர் தன் சிம் கார்டை அதில் போட்டிக்கிறார். நம் சகோதரன் கொஞ்சம் புத்திசாலி, அந்த நும்பெர்க்கு போன் செய்து அவரை பற்றி கேட்டு கொண்டு, போன் தொலைந்த புகார் பற்றி விசாரிக்கும் காவல் துறை அதிகாரியை நேரில் சந்தித்து விவரம் கூற, அவர் அந்தநபருக்கு போன் செய்து கேட்க்க, அவர் சில மணி நேரங்களுக்கு முன்பு தான் அந்த செல் போனை விலைக்கு வாங்கியதாக சொல்லிருக்கிறார். நம் காவலர் அந்த செல் போன் தொலைந்து போய் , அதற்க்கு புகார் செய்ய பட்டிருப்பதை பற்றி சொல்ல போன் திரும்ப ஒப்படைக்க பட்டது.

இதுல என்னன்னா போன் திருட்டு குடுத்த நபர்கள் இருவரும் படித்தவர்கள், அதனால இந்த மாதிரி செய்ய முடிந்தது. ஆனா படிக்காத, தொழில் நுட்பம் பற்றி தெரியாதவர்கள் பாடு திண்டாட்டம் தான். அவர்கள் தான் ஜாக்கிரதையாய் இருக்கனும்..


இதனால் நான் சொல்ல வருவது என்னன்னா "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுன்னு நம்ப பெரியவங்க சொன்னது தான் நானும் சொல்றேன்.

இன்னிக்கு வேலை கொஞ்சம் குறைச்சல் அதனால தான், இந்த சொற்பொழிவு.


Thursday, 14 June 2012

குழந்தைகளுடன்

போன வாரம் தோழி ஒருவரின் தம்பி திருமணதிற்கு போக வேண்டி இருந்தது. சரி போலாமேன்னு சனிக்கிழமை மதியம் ரெயில்ல கெளம்பினேன். பஸ்ல போறதா விட ரயில் பயணம் கொஞ்சம் நல்ல இருக்கும். அதவிட பஸ்ல போறத காட்டிலும் ரயில் கட்டணம் ரொம்பவே குறைவு. பஸ்ல 96 ரயில்ல 56 அதுபோக டவுன் பஸ்ல தனி.

சரி நா மேட்டர்க்கு வரேன். ட்ரைன்ல ரீசெர்வ் பண்ணி போறதா விட ஜெனரல் கம்பர்ட்மென்ட்ல போறது கொஞ்சம் ஜாலி தான். டிக்கெட் வாங்க கூட்டம் இருக்கும் அதனால பக்கதுல இருக்குற ஒரு ரயில்வே ஸ்டேஷன் ல டிக்கெட் வாங்கிட்டேன். அதனால கொஞ்சம் மெதுவா போய் கூடத்துல அடிச்சிக்காம ஒரு ஜன்னல் சீட் பிடிச்சி அப்பாடான்னு உக்காந்தேன்.

பக்கத்துக்கு சீட்ல ஒருத்தர் அவர் குழந்தைகளோட வந்தார். சீட்ல அவங்கள உக்கார வெச்சிட்டு அவர் கீழ இறங்கி போய்ட்டார். பக்கதுல இருந்தவங்க கிட்ட ஏதும் சொல்லல. அவர் குழந்தைகள்ள ஒரு பொண்ணு 5 வயசு இருக்கலாம். ஒரு பையன் 3 வயசு இருக்கும். கொஞ்ச நேரத்துல அந்த சின்ன பையன் அழ ஆரம்பிச்சிட்டான். நா ஏதும் பண்ணல, அவங்க அப்பாவ காணோம்ன்னு தேட ஆரம்பிச்சி அது அழுகைல வந்து நின்னது.

நமக்கே கொஞ்சநேரம் அம்மாவை காணலன்ன ஒரு மாதிரி ஆய்டும்ல. அந்த பிஞ்சு குழந்தையின் நிலைமைய யோசிச்சி பாருங்க. அந்த பொண்ணு கொஞ்சம் அமைதியா இருந்தது. ஒரு 10 நிமிசத்துல அதுவும் அழுகற மாதிரி முகமெல்லாம் ஒருமாதிரி சோகமா ஆய்டிச்சி. பக்கதுல இருக்குற யார் பேசினாலும் அழுகை மட்டும் தான் பதில்.

அப்புறம் கொஞ்சம் சமாதனம் பண்ணி உங்க அப்பா போன் நம்பர் சொல்லு போன் பண்ணி பேசுன்னு ஒரு 5 தடவ சொன்னதுக்கு அப்புறமா தான் போன் நம்பர் சொல்லிச்சி. போன் பண்றதுக்குள அவங்க அப்பாவும் அம்மாவும் வந்துட்டாங்க. உடனே ட்ரைன் நகர ஆரம்பிச்சது.

அவர் மனைவிய கூப்பிட போனதா சொன்னார்.இதுமாதிரி போறப்ப பக்கதுல சொல்லிடு போன கொஞ்சம் நல்லது. அப்படி இல்லன்ன கூட போன் பண்ணி வரசொல்லிட்டு கோச்க்கு வெளில வெயிட் பண்ணலாம். இவங்கள தேடி குழந்தைங்க வெளிய போன என்ன ஆகறது. இல்ல வண்டி கெளம்பிட்ட என்ன பண்ண முடியும். இதுல அந்த பிஞ்சுகளுக்கு தமிழ் தெரியல, மலையாளம் மட்டும் தான் தெரியும் போல.

அவர் செய்த ஒரு நல்ல விஷயம் என்னா, அவர் பொண்ணுக்கு அவரோட போன் நம்பர் சொல்லி குடுத்திருக்கார். அதனால கொஞ்சம் பயம் இல்ல. இருந்தாலும் குழந்தைகள் விசயத்துல கொஞ்சம் முன் ஜாக்கிரதையா இருப்பது நல்லது தானே.


Sunday, 3 June 2012

குழந்தையோட போறப்ப

போன வாரம் சனிக்கிழமை ஒரு அவசர வேலைக்காக ஆபீஸ்க்கு வர வேண்டி இருந்தது. எப்பவும் சனிகிழமை லீவ் தான். யாரும் வரமாட்டாங்க, அதனால நாம கொஞ்சம் மெதுவா கெளம்பி வந்தேன்.

வர்ற வழில ரெண்டு இடத்துல சிக்னல் இருக்கும். அதுல ஒரு சிக்னல்ல ஒரு பொண்ணு அவங்க குழந்தையோட வண்டில வந்தாங்க. அவங்களும் நான் போற வழில தான் போனாங்க.


அவங்க குழந்தை பின் பக்கமா உக்கார வெச்சிருந்தாங்க, அவங்க கொஞ்சம் குண்டு வேற. அந்த குழந்தை ஒரு பக்கமா சாஞ்ச மாதிரி உக்காந்திருந்தது.


உடனே அவங்கள நிறுத்தி விஷயத்த சொன்னேன். இதில அவங்க தலைக்கு ஹெல்மெட் வேற போட்ருந்தாங்க. அந்த குழந்தை கூப்பிட்ட கூட அவங்களுக்கு கேக்காது.


பொதுவா குழந்தைகள் இந்த மாதிரி வண்டில போறப்ப கொஞ்ச நேரத்துல தூங்க ஆரம்பிச்சிடும். இந்த மாதிரி நேரத்துல நாம கூட ஒருத்தர துணைக்கு கூட்டிட்டு போலாம். அப்படி முடியதவங்களுக்கு சில யோசனைகள்.


வண்டி ஓட்டும் பெண்கள் நிறய பேர் சுடிதார் தான் போடறாங்க, அதன் துப்பட்டா வுடன் சேர்த்து குழந்தைகளை இடுப்பில் கட்டி கொள்ளலாம் ( இது என் அருமை தங்கை சொல்லிக்குடுத்த யோசனை)


இதுக்காகவே சில  ஜாக்கெட் விக்குது, அதை முன்புறம் அல்லது நமக்கு பின் புறம் மாடி அதில் குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு செல்லலாம்.


இதுக்கு எல்லாம் வசதி இல்லனா முடிந்தவரை வண்டி முன்புறம் நமது கால்களுக்கு இடையில் குழந்தகைளை வைத்து கொள்ளலாம்.


இது பெண்களுக்கு மட்டும் இல்லங்க, ஆண்களுக்கும் தான். முடிந்தவரை குழந்தைகளை கொண்டு செல்லும் பொது கியர் இல்லாத வாகனகளை உபயோகிக்கவும். கியர் இல்லாத வாகனகள் ஒரு கையில் சுலபமாக இயக்க முடியும்.


இந்த மெசேஜ்க்கு சரியான படம் கிடைக்கல அதனால தான் ரொம்ப லேட். அது இல்லாம 2 மாசமா ஆபீஸ்ல ஷிப்ட் டைம் மாத்தினால எதுமே எழுத முடியல. இல்லைனா மட்டும்  நீ எழுதற லட்சணம் எங்களுக்கு தெரியாதான்னு நீங்க துபரதுக்குள்ள நா ஜூட்.


சாம கோடங்கி மாதிரி இரவு மட்டும் போயிட்டு வர்ற வேல இப்ப கொஞ்சம் மாறி மதியம் போயிட்டு, நடு சாமத்துல தெரு நாய் தொரதுரதுல இருந்து தப்பிச்சி பத்திரமா வீட்டுக்கு வந்து சேரதுக்குள்ள ........ ஆவ்வ் .....

Monday, 20 February 2012

உயர்ந்த மனிதர்


பஸ் கண்டக்டர் என்பவர் எப்படி இருப்பார்? நம்மைப்பொறுத்த வரை ஒரு உருவகம் உண்டு....எச்சியைத்தொட்டு டிக்கெட் கிழித்துகொண்டு, சதா சர்வகாலமும் யாரையவது, மரியாதை இல்லாமல் திட்டிக்கொண்டு, மீதி சில்லரையை தராமல், ஏமாத்திக்கொண்டு என்று..., ஒரு சில நடத்துனர்களுக்கு, வேறு ஒரு முகமும் இருக்கக்கூடும்.

அதில் ஒருவர்தான் கனக சுப்ரமணி. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் பேருந்தில் பணிபுரிகிறார். டிக்கட் கொடுப்பதுடன் இவரது வேலை முடிவதில்லை. சொல்லப்போனால் அப்போதுதான் ஆரம்பிக்கிறது.. அப்படி என்னதான் செய்கிறார்? கல்லாரில் பேருந்து சிறிது நேரம் நிற்கும் போது.....பயணிகளுக்கு சுற்றுப்புற சூழல் குறித்து உரையாற்றுகிறார். சாலைப்பாதுகாப்பு பற்றி அறிவுறுத்துகிறார்.

தினமும் எதாவது ஒரு திருக்குறளைப் பற்றி விளக்குகிறார். அன்றைய தினம் எந்தப் பயணியுடைய பிறந்தநாளோ, திருமணநாளோ இருந்தால் அவர்களுக்கு ஒரு திருக்குறள் புத்தகம் பரிசளிக்கிறார். அப்படி யாருடைய விசேஷநாளும் இல்லை என்றால் பயணியருள் உள்ள ஒரு ஆசிரியருக்கோ, காவலருக்கோ அல்லது ஒரு மாணவனுக்கோ அப்புத்தகத்தை அளிக்கிறார்.

அதாவது இவர்பணியாற்றும் ஒவ்வொரு நாளும், பத்து வருடங்களுக்கும் மேலாக...... ஒரு ட்ரஸ்ட் ஆரம்பித்து ஓய்வு நேரத்தில் சிறைக்கைதிகளுக்கு பாடம் நடத்துகிறார். ஒரு இசைஆசிரியரை நியமித்து கைதிகளுக்கு சங்கீதம் கற்றுத்தருகிறார். போட்டிகள் நடத்தி பரிசளிக்கிறார்.

இவரைப்பற்றி ஒரு கட்டுரை இன்று 'The Hindu' பத்திரிக்கையில் வந்துள்ளது.

இவரைபோல் மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
வாழ்த்துவோம் அவரை..எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகிர்வோம் செய்தியினை..

இது "Facebook "  இல் பகிரப்பட்ட ஒரு சிறப்பான செய்தி. அதில் பகிரலாம் ஆனால் அது எவ்வளவு நாள் இருக்கும் என்று தெரியாது. அதனால் தான். இதை அளித்த நண்பருக்கு நன்றி.

Take a bow,
Mr. Conductor.



[நன்றி : The Hindu]
via Parivel Murugesan
17.february.2012

Sunday, 12 February 2012

காதல்

காதல்

காதலை சொல்ல மொழி தேவை இல்லை, ஆனால் நம்ப பய புள்ளங்க, உக்காந்து யோசிச்சு உலகத்துல இருக்குற 100 மொழிகள்ல எப்படி காதலை சொல்றதுன்னு கண்டுபிடிச்சு போட்டிருகாங்க. 

இது பெரும்பாலும் ஆண்களுக்கு தான் தேவைப்படும். ஏன்ன முதல்ல காதலை சொல்றதுக்கு அலையோ அலைன்னு அலையறது அவங்கதான். 


இப்பெல்லாம் பெரும்பாலும் இணையத்தின் மூலமாக தான் காதல் பூக்கிறது. அதுலயும் சிலர் ரொம்ப அட்வான்ஸ், நம்ப ஊர் பொண்ணுங்க கிட்ட செருப்படி வாங்கினது பத்தாதுன்னு வெளிஊர் பொண்ணுங்கள ரூட் விடுவாங்க, இன்னும் சிலர் வெளிநாட்டு பொண்ணுங்களுக்கு (என்ன மாதிரி). 


அப்படி பட்ட அப்பாவி பசங்க கஷ்டபடாம இருக்கதான் இந்த ஐடியா. ஆகவே இதனால நீங்க எந்த நாடு பொண்ணுங்கள ரூட் விடரிங்களோ, அந்த நாடு மொழில காதல சொல்லி அசத்துங்க.  நம்ப நாட்ல வேணாங்க இங்க இருக்குற பொண்ணுக எல்லாம் ரொம்ப உஷார்.  நல்ல வொர்க் அவுட் ஆச்சினா சொல்லுங்க, இல்ல அங்கும் செருப்படி தான்னா, விடு மச்சி நமக்கு ஆயரம் பிகர் மடியும் மச்சி.   

How to say I Love You in 100 Languages !!!
(Psst.... some are these are pretty funny!
English - I love you
Afrikaans - Ek het jou lief
Albanian - Te dua
Arabic - Ana behibek
Armenian - Yes kez sirumen
Bambara - M'bi fe
Bangla - Aamee tuma ke bhalo aashi
Belarusian - Ya tabe kahayu
Bisaya - Nahigugma ako kanimo
Bulgarian - Obicham te
Cambodian - Soro lahn nhee ah
Cantonese Chinese - Ngo oiy ney a
Catalan - T'estimo
Cheyenne - Ne mohotatse
Chichewa - Ndimakukonda
Corsican - Ti tengu caru (to male)
Creole - Mi aime jou
Croatian - Volim te
Czech - Miluji te
Danish - Jeg Elsker Dig
Dutch - Ik hou van jou
Esperanto - Mi amas vin
Estonian - Ma armastan sind
Ethiopian - Afgreki'
Faroese - Eg elski teg
Farsi - Doset daram
Filipino - Mahal kita
Finnish - Mina rakastan sinua
French - Je t'aime, Je t'adore
Gaelic - Ta gra agam ort
Georgian - Mikvarhar
German - Ich liebe dich
Greek - S'agapau
Gujarati - Hoo thunay prem karoo choo
Hiligaynon - Palangga ko ikaw
Hawaiian - Aloha wau ia oi
Hebrew - Ani ohev otah (to female)
Hebrew - Ani ohev et otha (to male)
Hindi - Hum Tumhe Pyar Karte hae
Hmong - Kuv hlub koj
Hopi - Nu' umi unangwa'ta
Hungarian - Szeretlek
Icelandic - Eg elska tig
Ilonggo - Palangga ko ikaw
Indonesian - Saya cinta padamu
Inuit - Negligevapse
Irish - Taim i' ngra leat
Italian - Ti amo
Japanese - Aishiteru
Kannada - Naanu ninna preetisuttene
Kapampangan - Kaluguran daka
Kiswahili - Nakupenda
Konkani - Tu magel moga cho
Korean - Sarang Heyo
Latin - Te amo
Latvian - Es tevi miilu
Lebanese - Bahibak
Lithuanian - Tave myliu
Malay - Saya cintakan mu / Aku cinta padamu
Malayalam - Njan Ninne Premikunnu
Mandarin Chinese - Wo ai ni
Marathi - Me tula prem karto
Mohawk - Kanbhik
Moroccan - Ana moajaba bik
Nahuatl - Ni mits neki
Navaho - Ayor anosh'ni
Norwegian - Jeg Elsker Deg
Pandacan - Syota na kita!!
Pangasinan - Inaru Taka
Papiamento - Mi ta stimabo
Persian - Doo-set daaram
Pig Latin - Iay ovlay ouyay
Polish - Kocham Ciebie
Portuguese - Eu te amo
Romanian - Te ubesk
Russian - Ya tebya liubliu
Scot Gaelic - Tha gra\dh agam ort
Serbian - Volim te
Setswana - Ke a go rata
Sign Language - ,\,,/ (represents position of fingers when
signing'I Love You')
Sindhi - Maa tokhe pyar kendo ahyan
Sioux - Techihhila
Slovak - Lu`bim ta
Slovenian - Ljubim te
Spanish - Te quiero / Te amo
Swahili - Ninapenda wewe
Swedish - Jag alskar dig
Swiss-German - Ich lieb Di
Tagalog - Mahal kita
Taiwanese - Wa ga ei li
Tahitian - Ua Here Vau Ia Oe
Tamil - Nan unnai kathalikaraen
Telugu - Nenu ninnu premistunnanu
Thai - Chan rak khun (to male)
Thai - Pho m rak khun (to female)
Turkish - Seni Seviyorum
Ukrainian - Ya tebe kahayu
Urdu - mai aap say pyaar karta hoo
Vietnamese - Anh ye^u em (to female)
Vietnamese - Em ye^u anh (to male)
Welsh - 'Rwy'n dy garu
Yiddish - Ikh hob dikh
Yoruba - Mo ni fe    



நாளைக்கு தான் இதை போடலாம்ன்னு நெனச்சேன், அதுக்குள்ள ஒரு சின்ன வேல, நாளைக்கு எங்கும் போக முடியாத நிலைமை, நீங்க நினைக்கிற மாதிரி இல்ல ஆபீஸ்ல ஒரு பயிற்சி வகுப்பு. காதலி இருக்கிறவங்க நாளைக்கு ஒருநாளாவது அவங்கள சந்தோஷ படுத்துங்க, இல்லாதவங்க சிக்கிரமா ஜோடிய கண்டுபிடிச்சி காதல சொல்லி அசத்துங்க........

Wednesday, 8 February 2012

Boys / Girls

எங்க போனாலும் இந்த பசங்களுக்கு மரியாதையே இல்லப்பா. 
















போற போக்க பாத்த பசங்களுக்கு 33 % கூட கிடைக்குமான்னு தெரியல..... என்ன பண்றது பசங்களா பொறந்த தாங்கி தான் ஆகணும். :(........ 

Sunday, 5 February 2012

108

இந்த சம்பவம் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.

எங்க ஆபீஸ்க்கு பக்கத்துல ஒரு பஸ் ஸ்டாப் இருக்கு. அங்க ஒரு வயசான பெரியவர் பஸ்க்கு காத்திருந்தார். அப்ப அவருக்கு திடிர்ன்னு மயக்கம் வந்திருச்சி. அங்க இருந்த சிலர் அவசர உதவி 108 க்கு போன் பண்ணி விவரம் சொல்லி வண்டிய வர சொல்லிட்டாங்க.

அந்த வண்டி உடனே வந்தது. அவங்க உடனே அவர கொண்டு போகாம, அங்க இருக்குறவங்க கிட்ட விசாரிச்சி எதோ ரெகார்ட் எழுத ஆரம்பிச்சிட்டாங்க. கொஞ்ச நேரத்துல்ல அவர்க்கு தானே மயக்கம் தெளிஞ்சி அவர் சகஜ நெலைமைக்கு திரும்பிட்டார். 

அதுக்கு அப்புறம் தான் அந்த காமெடி கலாட்டா. அவர் எழுந்ததும் அந்த வண்டி வந்தது. அவர் நா சரியிட்டேன்னு சொன்னாலும் அவங்க கேக்கல. அவர கதற கதற (இது நம்ப பில்ட் அப்) 108 ல ஏத்திகிட்டு (கூட்டிட்டு) போய்ட்டாங்க.   

அங்க இருந்தவங்க கேட்டதுக்கு ரெகார்ட் எழுதியாச்சி அதனால அவர கண்டிப்பா கூட்டிட்டு போகணும்ன்னு சொல்லிட்டாங்க. 

அவர பாக்க ரொம்ப பாவமா இருந்தது. அவங்க கடமை உணர்சிய என்னன்னு சொல்ல. 

மெசேஜ்க்கும் படத்துக்கும் சம்பந்தம் இல்ல. ஆனா இந்த படம் கொஞ்சம் பொருத்தமா இருக்கும்ன்னு பட்சி சொல்லிச்சி (அதாங்க நம்ப பிரைன்). அசிங்கமா நீங்க எதாவது சொல்ல்றதுக்குள்ள நா எஸ்கேப். 

மீண்டும் அடுத்த பதிவு விரைவில். 

Tuesday, 24 January 2012

பதினோரு ருபாய் நோட்டு

தினமும் பைக்ல ஆபீஸ்க்கு போய்ட்டு வருவது கொஞ்சம் கடியா இருக்குனு கொஞ்சநாள் பஸ்ல போலனுன்னு முடிவு பண்ணி பஸ்ல போக ஆரம்பிச்சேன். நமக்கு தான் பிரச்சனை பிளான் பண்ணி முன்னாடி வந்து நிக்குமே. (பெட்ரோல் விலை ஏறி போச்சின்னு பஸ்ல வரது ஆபீஸ்ல கொஞ்சம் பேருக்கு தெரியும். இத படிக்கறப்ப கண்டிப்பா கொஞ்சம் கலாய்பாங்க.)

இப்ப நம்ப மேட்டர் என்னன்னா "பதினோரு ருபாய் நோட்டு" இது எதுக்குன்னு கேக்கறிங்களா, முழுசா படிச்சா நீங்களே எனக்கு விழா எடுப்பிங்க (நீ முதல்ல விஷயத்த சொல்லு, உனக்கு விழா எடுக்கறதா, இல்ல உன் விலா எலும்ப எடுக்கறதங்கன்னு இத எழுதறப்பவே ஒரு புண்ணியவான் பின்னாடி இருந்து சொல்லிட்டார். எல்லோருக்கும் சந்தோசமா இருக்குமே )

வீட்ல இருந்து ஆபீஸ்க்கு வர்றதுக்கு பதினோரு ருபாய் பஸ் டிக்கெட். தினமும் சரியாய் சிலரை கொண்டு போக முடியமா? ஒருநாள் சரியா கொண்டுபோவேன், ஒரு நாள் இருபது ருபாய் கொண்டு போவேன், ஒருநாள் பனிரெண்டு இப்படி தான் முடிஞ்சவரைக்கும் சில்லறை கொண்டு போவேன், இதுல 12 ருபாய் கொண்டு போறப்பவும் 15 ருபாய் கொண்டு போறப்பவும் தான் பிரச்னை.

நடத்துனர் இருக்காரே அவர் கிட்ட 12  ரூபா கொடுத்து 11 ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிட்ட, மீதி ஒரு ரூபாய்க்கு நாம 10 தடவைக்கு மேல கேக்கணும். அப்பவும் சில நேரத்துல அது வராது. கூட பஸ்ல வரவங்க எல்லாம் கொஞ்சம் கேவலமா பாப்பாங்க.

அவங்க பைசா போன தானே தெரியும், அப்ப எப்படி கேவலமா லுக் விடறதுன்னு. இந்த மாதிரி சில்லறை பிரச்சினை வராம இருக்க நானே சிந்திச்சி ஒரு வழி கண்டுபிடிச்சிட்டேன். அது தான் இந்த 11 ரூபா. இந்த மாதிரி எங்க எங்க சிலரை பிரச்சினை இருக்குதோ அந்த தொகையை ஒரு ருபாய் நோட்டா பிரிண்ட் அடிச்சிட்டா, நமக்கும் பிரச்சினை இல்லை, நடத்துனர் பயணிகள் உறவும் சண்டை இல்லாமல் போகும்.


எனக்கு முதல் பிரச்சினை இந்த 11 ரூபா தாங்க. அதனால இதப்பத்தி ரிசர்வ் வங்கி கவர்னர் கிட்ட பேசி சீக்கிரமா  இந்த 11 ருபாய் நோட்டை வெளியிட்டு மக்கள் பிரச்சினை தீர்க்க சொல்ல போறேன். இதுக்கு அரசாங்கத்துல யாராது பெரிய ஆளுங்கள தெரிஞ்சவங்க இருந்தா எனக்கு கொஞ்சம் உதவி பண்ணுங்க. அவங்க டிசைன் பண்ண, பிரிண்ட் பண்ண ஆகும் கால தாமதிற்காக அதையும் நானே தேடி கண்டுபிடிச்சி இந்த பதிவுடன் இணைத்து இருக்கேன். 


நா கண்டு பிடிச்சதுன்ன, கூகிள் கிட்ட இருந்து சுட்டது தாங்க (பின்னாடி எந்த பிரச்சினையும் வராம இருக்கனும்ல ).  என்ன மாதிரியே உங்களும் சில்லறை பிரச்சினை இருந்த நீங்களும் இந்த மாதிரி அரசாங்கத்துக்கு உங்களால முடிஞ்சா ஆலோசனைகளை வழங்கி அவங்க குடுக்கறத வாங்கிகோங்க. 



சில நல்ல நடத்துனர்களும் இருக்காங்க, என்னோட "PEN DRIVE" ஒரு நாள் பஸ்ல காணாம போச்சி. அத அவர் எடுத்து வெச்சி நா அடுத்த நாள் வரப்ப என்கிட்ட பத்திரமா குடுத்தார். அதுல இருந்து அவர நா அப்பான்னு தான் கூப்பிடுறேன். அந்த அளவுக்கு நல்ல மனிதர். இன்னும் சில நடத்துனர்கள் சில்லறை இல்லாவிட்டால் பரவாயில்லை நாளைக்கு குடுங்கன்னு சொல்கிறார்கள். இப்படி சில நல்ல மனிதர்களும் இருக்காங்க. அவர்களுக்கு நடுவில் இப்படி சில்லறைக்காக இருப்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. ஒன்று அரசாங்கம் பஸ் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யும் போது இப்படி சில்லறை இல்லாமல் முழு தொகையாக அறிவிக்கலாம். அப்போது தான் நமக்கு இந்த மாதிரி தொல்லைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.

Thursday, 19 January 2012

ATM - கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்

என்னமோ தெரியல, இந்த வாரம் முழுக்க  வங்கி பத்தின விஷயமாவே காதுல விழுது. காலைல ATM ல பணம் எடுக்க போனப்ப சில பல விஷயங்கள் தோணிச்சி. அத பத்தி தாங்க இனிக்கி சொல்ல போறேன்.

ATM சென்ட்டர் உள்ள நாம போன சில தவறுகளை பற்றி தான் இந்த பதிவு. 

கும்பலா போககூடாதுன்னு அறிவிப்பு இருக்கும் (ஆனா நாம அங்க தான் நம்ப நட்பு, காதலிய விடு குடுக்காம போவோம்)

வெளிய எவ்ளோ பேர் காத்திருந்தாலும் நமக்கு என்னன்னு சிலர் இல்லாத "Balance" செக் பண்ணிட்டே இருப்பாங்க. 

சிலர் அப்ப தான் புதுசா கணக்கு தொடங்கினவங்கள கூட்டிட்டு வந்து ட்ரைனிங் குடுப்பாங்க. (எப்படி மெசின்ல இருந்து பணம் எடுக்குறதுன்னு)

சிலர் அங்க வந்து தான் சொந்த கதை, சோக கதை எல்லாம் போன்ல பேசிட்டு இருப்பாங்க. (போன் பேச கூடாதுன்னு போர்டு இருக்கும், அங்க இருக்குற செக்யூரிட்டி காட்டு கத்தலா கத்திட்டு இருப்பார் அது எல்லாம் காதுலையே விழாது)

இந்த மாதிரி நாம பண்றப்ப நமக்கே தெரியாம சில தப்பு நடக்குது, அது என்னன்னா 

முதல்ல நேரம் வீணாகுது

அவசரமா பணம் எடுக்க வேண்டி இருப்பவர்கள் பாதிக்க படுகிறார்கள் 

ATM ல இருந்து வெளிய வர பணம் 30 செகண்ட்க்கு மேல இருக்காது. அதுக்குள்ள வெளில எடுக்கலன்னா அது திரும்பவும் உள்ள போய்டும். சில மேதாவிகள் பணத்த கைல எடுக்காம, அக்கௌன்ட்ல மிச்சம் எவ்ளோ இருக்குன்னு ஸ்லிப்ப கைல வெச்சிட்டு பாத்துட்டு இருப்பாங்க, அதுக்குள்ள பணம் திரும்ப உள்ள போய்டும். அப்புறம் கஸ்டமர் கேர்,  வங்கி எல்லாத்துக்கும் அலைஞ்சி திரும்ப வாங்கணும். 

சிலருக்கு பணத்த எடுக்கற அக்கரை, ATM கார்டுகளை திரும்ப எடுக்கறதுல இல்ல. கார்ட மறந்து பொய் மெசின்ல விட்டுட்டு போய்டுவாங்க, ஒன்னு அது மெசின் குள்ள போய்டும், இல்லனா அடுத்து யாரது வந்தங்கான அவங்க எடுப்பாங்க, அது திரும்ப கிடைகிறது நம்ப அதிர்ஷ்டம் தான்னு சொல்லணும். 

இதில் மற்ற வங்கி ATM ல போட்ட திரும்ப வாங்கறதுக்கு கொஞ்சம் தாமதம் ஆகலாம், இதில் சில வங்கிகள் மற்ற வங்கி ATM கார்டுகளை திருப்பி தருவது இல்லை. 

இந்த மாதிரி இம்சைகள் நம்ம தலைல நாம்பளே மண்ண போட்டுக்கற மாதிரி, நமக்கு தான் இடைஞ்சல்.

இதே மாதிரி வங்கி தரப்புல இருந்தும் சில இடைஞ்சல்கள் இருக்கு, சில நேரத்துல மெசின் சரியாய் வேலை செய்யாது, பணம் இருக்காது, எல்லாம் சரியாய் இருந்தாலும் பணம் வெளில வராது, ஆனா நம்ப கணக்குல இருந்து கொறஞ்சி இருக்கும். கொஞ்சம் அனுபவம் இருப்பவர்கள் பதட்டம் அடையாமல் கஸ்டமர் கேர் செண்டர்க்கு போன் செய்து விவரம் சொல்லி சரி செய்து கொள்வார்கள்.

இது நகர வாசிகளுக்கு சரி, ஆனால் படிக்காத அல்லது இந்த அனுபவம் இல்லாத மக்கள் என்ன செய்ய முடியும். வங்கி தரப்பில் இதை பற்றி கொஞ்சம் யோசித்து கொஞ்சம் சுலபமாக எல்லா தரப்பு மக்களும் பயன் பெற செய்தால் நன்றாக இருக்கும்.

நம் அவசர தேவைகளை விரைவில் பூர்த்தி செய்து கொள்ள தான் இந்த சேவைகள், இதை சரியான முறைகள் பயன் படுத்தி கொள்வது நம் கையில் தான் உள்ளது.

இத்தோட இந்த பதிவை முடிசிக்கிறேன், கெளம்பு கெளம்பு காத்து வரட்டும்னு நீங்க சொல்றது கேக்குது. 




Tuesday, 17 January 2012

கிரெடிட் கார்டு

கிரெடிட் கார்டு ( தமிழ்ல சொன்ன கடன் அட்டை). நம்ப ஊர்ல அரிசி, பருப்பு எல்லாம் இலவசமா கிடக்குதோ இல்லையோ, கிரெடிட் கார்டு இலவசமா வீடு தேடி வருது, அதும் நீங்கள் சரி என்று சொல்லிய அடுத்த ஒரு சில நாட்களில்.

இந்த இலவசத்திலும் சில பல பிரச்சினைகள் தானாகவே முளைக்கிறது ( ஓசில கெடைக்குதுன்னு வாங்குனிங்கள்ள இப்ப அனுபவினு சிலர் சொல்றது இந்த பதிவை எழுதிகிற போதே எனக்கு கேக்குது.)

என்ன மாதிரி தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு கிரெடிட் கார்டு வாங்கறது ரொம்ப சுலபம். எப்படினு கேடிங்கன்ன, எங்களுக்கு சம்பளம் எப்படியும் ஒரு தனியார் வங்கி மூலமாக தான் வரும் (நீ செய்யற வேலைக்கு சம்பளம் வேற தரங்களா, பாதி நிறம் முக புத்தகம், ட்விட்டர், ஜிமெயில் இந்த மாதிரி வேலைகள செஞ்சிட்டு நேரம் கெடச்ச கொஞ்சம் வேலையும் செய்யறானு நண்பர்கள் அடிக்கடி சொல்லறது இப்பதாங்க ஞாபகம் வருது). முதல்ல அந்த பாங்க்ல இருந்து சேமிப்பு கணக்கு (சம்பள கணக்குனு கூட சொல்லலாம்) ஆரம்பிக்க, விண்ணப்பத்தை நிரப்பி தர சொல்லுவாங்க, அதுலயே நம்ப போன் நம்பர், ஈமெயில் மற்றும் தற்காலிக, நிரந்தர முகவரி எல்லாமே சம்பந்தப்பட்ட பேங்க் க்கு போய் சேந்துடும்.

ஒரு 10 நாளைக்கு எந்த தொந்திரவும் இருக்காது. அப்புறம் அந்த பாங்க்ல இறுதி அதன் கிரெடிட் கார்டு ஆபிசர் போன் செய்வார், பேசுறது ரொம்ப கனிவா தான் இருக்கும், ஏன்னா வியாபாரம் நடகனும்ல்ல. இது எல்லாத்துக்கும் தெரிஞ்ச விஷயம் தான். இப்ப என்ன சொல்லவரனு கேக்குறிங்க, ஒரே நிமிஷம் ஒரு கோர்வையா சொல்ல முயற்சி பண்றேன், ஆனா அந்த கருமாந்திரம் மட்டும் எனக்கு வர மாட்டேன்குது,

இந்த மாதிரி ஓசில வந்த கிரெடிட் கார்டு நானும் 2 - 3 வாங்கி வெச்சிருக்கேன். எல்லோர மாதிரியும் எனக்கும் சில பிரச்சினை வந்தது, ஆனா நாம்ப கொஞ்சம் அலெர்ட், அதனால கொஞ்சம் பேசி, மிரட்டி அதை சுமுகமா முடிச்சிட்டேன்.


ஆனா போன மாதமும், இந்த மாதமும் ஒரு புது ரூபத்துல பிரச்சினை வந்தது. அது என்னன்னா ஒரு பேங்க் கிரெடிட் கார்டுல ஒரு 15 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கினேன். அத "EMI " அதாவது அந்த தொகையை மூன்று முதல் பனிரெண்டு மாத தவணைகளில் செலுத்தலாம். நம்ப கைல இவ்ளோ பணம் இல்ல (அப்ப நீயெல்லாம் "சாப்ட்வேர் கம்பெனில வேலை செய்யறேன்னு வெளில சொல்லதனு ஒரு அசரிரி கேக்குது), என்னங்க பண்றது எங்களுக்கும் கொஞ்சம் கமிட்மென்ட் இருக்குல்ல.


சரி வாங்கினதுக்கு பணம் கட்டிதாங்க ஆகணும், எனவே பேங்க் கஸ்டமர் கேர் சென்டர்க்கு போன் பண்ணி, விவரம் சொல்லி, "EMI" பற்றி கேட்டா, ஒரு குண்டு தூக்கி போட்டாங்க, உங்க கார்டுக்கு இந்த வசதி இல்லன்னு சொல்லிட்டாங்க. சரி வேற எதாவது செஞ்சி உதவி செய்ய முடயுமானு கேட்ட, தற்சமயம் உங்களுக்கு இதில் எந்த உதவியும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க.


யோசிச்சு பாத்ததுல்ல, இந்த பேங்க் இல்லைன்னா என்ன அதுதான் இன்னும் இரண்டு பாங்க்ல கிரெடிட் கார்டு வாங்கிருக்கோம்ல அவங்க கிட்ட கேக்கலாம்னு நெனச்சி அடுத்த பேங்க் கஸ்டமர் கேர்க்கு போன் பண்ணி பேசுனா ஒரு உபயோகமான தகவல் தந்தாங்க, அதாவது அந்த வங்கிக்கு இந்த வங்கி பணம் செலுத்திவிடும் அதை நாம் தவணை முறையில் செலுத்தலாம்.


சரி என்று சொல்லி செலுத்த வேண்டிய வங்கி இன் கிரெடிட் கார்டு நம்பர் மட்டும் சொல்லிவிட்டு மற்ற விவரங்களை சொல்லி கொஞ்சம் நிம்மதியா இருந்தேன். ஒரு 2 நாள் கழித்து ஒரு குறும் செய்தி (அதாங்க sms ) என்னோட கிரெடிட் கார்டு ஒரு மும்பை ஆன்லைன் கம்பெனி மூலமாக ருபாய் 1000 சுரண்டி இருப்பதாக அந்த தகவலில் இருந்தது.


உடனடியாக அந்த வங்கி கஸ்டமர் கேர் சர்வீஸ் நம்பரில் போன் செய்து விவரத்தை கூறினேன். அவர்களும் சரிபார்த்து அதை உறுதி செய்தார்கள். நான் இருக்கும் இடம் மற்றும் அந்த "Transaction" நான் செய்யவில்லை என்று சொல்லி, அதை சரி செய்து, கிரெடிட் கார்டு பிளாக் செய்து, வேறு கிரெடிட் கார்டு வாங்கி, அதுக்கு 100 ருபாய் தண்டம் அழுது, இதோடு போனதே என்று நிம்மதியா இருந்தேன்.


அடுத்த மாதமும் கொஞ்சம் மருத்துவ மனை செலவிற்காக கொஞ்சம் கார்டு ஐ சுரண்ட, திரும்பவும் இதே தொல்லை, ஆனால் இந்தமுறை கொஞ்சம் யோசித்து, வங்கி கஸ்டமர் கேர் அதிகாரிகளிடம் பேசி, இந்த தொடர் சுரண்டல்களை பற்றி சொல்லி, இது தொடரும் பட்சத்தில் நான் கார்டு ஐ வங்கியில் திருப்பி செலுத்திவிட்டு உரிய வழக்கு தொடர போவதாக சொன்னேன். அவர்கள் இரண்டு நாள் அவகாசம் கேட்டார்கள், இரண்டு நாள் கழித்து போன் செய்தேன், அதற்குள் எல்லாம் சரி செய்யப்பட்டு விட்டதாக கூறினார்கள்.


நண்பர்களே கிரெடிட் கார்டு சாபமும் அல்ல வரமும் அல்ல. யோசித்து செயல் படுங்கள். இது சின்ன விஷயம் தான், ஆனால் நேரமும், போன் பில் என நிறைய நம் பக்கத்தில் நாம் செலவிட வேண்டும்.

எனக்கு வந்த தொல்லையை பற்றி தெரிந்து கொள்ள

http://www.consumercourt.in/credit-card/43371-hdfc-bank-credit-card-carefull.html 

இதை படித்த பிறகு தான் என்னைப்போல் நிறைய பேர் இப்படி பாதிக்க பட்டிருப்பது தெரிய வந்தது.

கடந்த ஆண்டு முதலாக இந்த பிரச்சினை இருந்தாலும், அதை இன்னும் வங்கியன் தொழில் நுட்ப பிரிவில் சரி செய்யது வருத்தம் அளிக்கிறது.

Wednesday, 11 January 2012

பொங்கல் வந்தாச்சி

பொங்கல் வந்தாச்சி,  அதனால வீட்ல இருக்கிறவங்களுக்கு எதாவது புதுசா செஞ்சி அசத்தலான்னு  நினைகிறவங்களுக்கு என்னால முடிஞ்சா உதவிய செய்யலான்னு யோசிச்சப்ப ஒரு சூப்பர் ஐடியா தோணிச்சி ( முதல்ல ஐடியா வ சொல்லு அப்புறம் சூப்பரா இல்ல ..... னு அப்புறம் சொல்லோறேம்னு சொல்றிங்களா)

எல்லோர் வீட்லும் பொங்கல் செய்வாங்க. ஆனா அதுல எவ்ளோ வகை இருக்குனு சாப்பிடர நமக்கு தெரியும், ஆனா செய்றவங்களுக்கு தெரியுமா? எதோ என்னால முடிஞ்சா வரைக்கும் சொல்றேன், வீட்ல இருகிறவங்கள இம்சை பண்ணி செஞ்சி தர சொல்றது உங்க திறமை.


  1.  சர்க்கரைப் பொங்கல்
  2.  வெண் பொங்கல்
  3.  மிளகு பொங்கல்
  4.  சாம்பார்  பொங்கல்
  5.  ரவா  பொங்கல்
  6.  கார பொங்கல்
  7. ஆந்திரா பொங்கல் 


இந்த மாதிரி நிறைய இருந்தாலும், பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல் தான் செய்வாங்க. சிலர் வீட்ல வெண் பொங்கலும் சேர்த்து செய்வாங்க.

இது எல்லாம் எப்படி செய்றதுன்னு கேட்டிங்கன்னா சத்தியமா என்னக்கு தெரியாது.  நீங்க செஞ்சி சாப்பிடுங்க. நல்ல இருந்த எனக்கும் சொல்லிகுடுங்க.   மேல சொன்ன பொங்கல் எப்படி செய்றதுன்னு கூகிள் அண்ணாச்சி கிட்ட கேளுங்க, அவர் கண்டிப்பா பதில் சொல்லுவார்.

இந்த வருஷம் என்னால இது எல்லாம் சாப்பிட முடயுமான்னு தெரியல. கைல அடி பட்டத்தால கூட்டத்துல பயணம் செய்ய முடியாத நிலை. ஆனா கண்டிப்பா எதாவது ஒரு நண்பர் வீட்டுக்கு எனக்கு அழைப்பு வரும். வந்தா போய்ட வேண்டியது தான்( நாங்க எல்லாம் ப்ரீ ஆ கெடச்சா finail  கூட குடிப்போம்)



Monday, 9 January 2012

நான் செய்த உதவி

தினமும் நிறைய மனிதர்களை சந்திக்கிறோம், அவர்களில் நமக்கு உதவும் நிலை சிலருக்கு இருக்கும், சிலருக்கு நாம் உதவி செய்யும் நிலை நமக்கு இருக்கும். அப்படி நம்மால் உதவும் நிலையில் இருக்கும் மனிதர்களை பற்றி தான் இந்த பதிப்பு.

ஆறு வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற ஒரு சின்ன சம்பவம். அப்போது நான் திருப்பூர் மாவட்டத்தில் ஒரு பனியன்
கம்பெனியில் "கிராபிக் designer " ஆக வேலை செய்து கொண்டிருந்தேன். வேலை விஷயமாக சில நேரத்தில் வெளியே செல்வது உண்டு. (இதுக்கு தனியா பைசா தரமாட்டாங்க, நாம தான் செலவு செய்யனும்)

ஒரு இரவு நேரத்தில், வேலை முடித்து வீடு திரும்பும் நேரத்தில் (கொஞ்சம் பசி வேறு) எதாவது சாப்பிடலாம் என்று தோனவே, பண பையை பார்த்தேன் (அதாங்க purse ), நீ வெச்சிருக்கிற 5 - 10 க்கு இது வேற வேணுமான்னு நீங்க முனுமுனுக்கறது எனக்கு நல்லாவே கேக்குது. நெனச்ச மாதிரி 8 ருபாய் சில்லறை மட்டும் தான் இருந்தது (என்ன பண்றது அப்போ சம்பளம் கம்மிதாங்க) இப்ப தான் "டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு" ன்னு குடுக்கற எல்லா கார்டும் வாங்கி வெச்சிருக்கேன்.

சரி நம்ப விஷயத்துக்கு வருவோம், பக்கதுல ஒரு சின்ன கடை இருந்தது, சூடா பஜ்ஜி, பட்டாணி இந்தமாதிரி சாப்பிடும் கடை அது. நமக்கு பஸ்க்கு 2 ரூபா தான். பாக்கி 6 ரூபா இருக்குல, அது எதாவது லைட் ஆ  சாப்பிடலாம் யோசிச்சிட்டு இருந்தப்ப ( 6  ரூபா தண்டா என்னமோ 600 ரூபாய்க்கு எதோ வாங்க போறமாதிரி யோசிக்கறனு திட்ற "mindvoice" எனக்கும் கேக்குது.


பரிதாபமான ஒரு குரல், எதாவது தர்மம் பண்ணுங்கன்னு கேட்டுச்சி. பாக்க ரொம்ப பாவமா இருந்ததாலும், நம்ப வீட்டுக்கு தானே போறோம் அதுக்குள்ள இத சாப்பிடாட்டி என்னனு நெனச்சி, இருந்த காசுல ஒரு 5 ருபாய் நாணயத்தை (நம்புங்க நா தர்மம் பண்ணேன்)  அவங்களுக்கு குடுத்துட்டு, நேர போய் பஸ் ஸ்டாப்ல பஸ் வரதுக்காக காத்திருந்தேன்.

அப்பதாங்க அந்த சம்பவம் நடந்தது. என்கிட்ட உதவி கேட்ட அந்த நபர் அந்த பஸ் நிறுத்தத்துக்கு பக்கதுல வந்து ஒரு ஆட்டோல ஏறி போனாங்க. கொஞ்சமல நேரியவே ஷாக் அடிச்ச மாதிரி இருந்தது. பக்கதுல இருந்த இன்னொரு ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரிச்சப்ப, அவர் சொன்னது ஷாக் அடிச்சதுல தேள் கொட்டினா எப்படி இருக்குமோ அப்படி இருந்திச்சி.

அந்த நபர் ஆட்டோ ஓட்டுனருக்கு தினசரி வடிக்கையாளராம், பிறரிடம் இருந்து இப்படி உதவி கேட்டே தினமும் பிழைப்பை நடத்துகிறார் என்றும், தினமும் குறைந்தது 250 ருபாய் சம்பாதிக்கிறார் என்றும் சொன்னார். தினம் போக வர ஆட்டோ, இரவு நேரத்தில் "டாஸ்மாக்" என்று சந்தோசமாக வாழ்கை நடத்துவதாக சொன்னார். நல்ல வேளை நா காசு குடுத்ததா சொல்லல. சொல்லிருந்தா அங்கேயே காரி துப்பிருப்பார். அடுத்து பதிலா தான் நீங்க இப்ப துப்ப போறீங்க.

அதுக்கு அப்புறம் இந்த மாதிரி உதவி பண்ணறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிப்பேன்.

இந்த சம்பவத்துக்கு அப்புறம் தான் எப்படி உதவி செய்யறதுன்னு கத்துகிட்டேன். நீங்களும் கத்துகோங்க.

முடிந்தவரை பண உதவி செய்வதை தவிர்க்கவும்.
அவர்களுக்கு என்ன தேவைன்னு கேட்டு அதை மட்டும் செய்யலாம்.
உடல் உறுப்புகள் இல்லாதவர்களுக்கு உதவி செய்ங்க

இந்த மாதிரி நிறைய வழி இருக்கு, நா உதவி செஞ்ச மாதிரி இல்லாம கொஞ்சம் யோசிச்சி செய்யுங்க.

Friday, 6 January 2012

பரிட்சை


எனக்கு தெரிஞ்சி பரிச்சைல இப்படி தாங்க எழுதலாம்.

படிச்சத எழுதலாம்
பக்கத்துல பாத்து எழுதலாம் (புக் பாத்து எழுதறது இந்த மாதிரி நிறைய இருக்கு )

ஆனா இங்க ஒருசிலர் எழுதிருக்கிற பதில்களை  பாத்திங்கன்ன இப்படி எல்லாம் பரிச்சைல பதில் எழுத முடியுமானு நீங்க அப்படியே ஷாக் ஆய்டுவிங்க. "Face book " நண்பர்களுக்கு இது புதுசு அல்ல. இது மாதிரி நிறைய பாத்திருபாங்க. நீங்களும் பாருங்க. சிரிங்க. மேல type  பண்ண முடியல கொஞ்சம் கை வலி. நீங்க சந்தோஷ படுவிங்கன்னு தெரியும். உங்க சந்தோஷம் இன்னும் ஒரு வாரத்துக்கு நீடிக்கும். அடுத்த வாரத்துல "Moortthi  returns".