இனிய தமிழ் பதிவுலக நண்பர்களே... எனக்கு ஏற்கனவே ஒரு வலை பக்கம் இருக்கு, அதுல பெருசா ஒன்னும் கிழிக்கல. அதுக்குள்ள இன்னொன்னு... என்னங்க பண்றது, எதாவது எழுதனும்ன்னு ஒரு வெறி (யார் யாரா கடிக்க போறேன்னு தெரியல).... அந்த வலை பக்கத்துல வெறும் கவிதைகள் (நல்ல எழுதுவேன்னு நெனச்சிட்டு போய் பார்த்த அடுக்கு நான் பொறுப்பு இல்ல) மட்டும் தான் இருக்கும். அதுல ஏன் புதுசா எழுதணும், அதுபாட்டுக்கு இருக்கட்டும், படிச்சிட்டு துப்பறவங்க இங்கயே துப்புங்க....
பிறந்தது சேலம்.... 4 வயதில் எல்லோரை போலவும் பள்ளி பிரவேசம் ..... ஆனால் கொஞ்சம் மாறுபட்டு..... எப்டின்ன ..... என்ன வீட்டுக்கு எதிரில் ஒரு அரசு ஆரம்ப பள்ளி இருக்கிறது (அட இன்னும் இருக்குங்க) முதல்ல அங்கதான் என்ன சேர்த்தாங்க.... ஆனா பாருங்க எங்க அம்மா வீட்டுக்கு வர்றதுக்குள நா வந்துருவேன்..... ஸ்கூல் முடிஞ்சி இல்ல, ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே (எப்படி நாங்கலாம் LKG படிக்கறப்பவே கட் அடிக்க கத்துகிட்டோம்) அதனால எங்க அம்மா கொஞ்சம் தூரமா இருக்குற ஒரு ஆங்கில நர்சரி பள்ளிக்கு அனுப்பிட்டாங்க... நானும் சைக்கிள் ரிக்சால போறதுக்கு ஆசைப்பட்டு வேற வழி இல்லாம ஸ்கூல்-க்கு போக ஆரம்பிச்சேன் (நல்ல படிகிறேன்னு அங்க இருந்த ஒரு டீச்சர் சொன்னதா ஞாபகம்) இப்படிதாங்க நா படிக்க ஆரம்பிச்சேன்........ அந்த ஸ்கூல்ல 2 வருஷம் படிச்சா பிறகு, வீட்டுக்கு பக்கத்துல இருக்குற இன்னொரு ஸ்கூல்ல சேர்த்தாங்க ( இங்க வர்றப்ப கட் அடிக்கற பழக்கம் மறந்து போச்சி) அதும் இல்லாம எங்க வீட்ல எல்லோரும் ஒரே ஸ்கூல் அதனால பேசாம ஸ்கூல் கு போக வேண்டி இருந்தது ..... அங்க ஒரு 5 வருஷம் அப்புறம் 6 , 7 எங்க அண்ணா கூட, அப்புறம் 8 - 10 அது ஒரு ஸ்கூல் அப்புறம் 11 - 12 ஒரு ஸ்கூல். ஆக மொத்தம் நா படிச்சி கிழிச்சது 5 ஸ்கூல் ல.

No comments:
Post a Comment