தலைப்பை பார்த்தவுடன் தப்பா நினைக்காதிங்க. நா இன்டெர்வியு ல அனுபவிச்ச எழுத்து தேர்வு பற்றி தாங்க சொல்ல போறேன். நா வேலை பாக்கிறது ஒரு தகவல் தொழில் (web development ) கம்பெனி. அடுத்த கம்பெனிக்கு தாவலம்னு யோசிச்சு ஒரு கம்பெனிக்கு apply பண்ணேன். அவங்களும் என்ன ஒரு நாள் நேர்ல வரசொன்னங்க. நானும் போனேன்.
என்ன மாதிரியே நிறைய பேர வர சொல்லிருந்தாங்க. மொத்தம் 3 ரவுண்டு (இன்டெர்வியு ல தாங்க ) முதல் ரவுண்டு எழுத்து தேர்வு. அதற்கான நேரம் 1 மணிநேரம். இரண்டாவது ரவுண்டு (technical round - சத்தியமா தமிழ் ல என்னனு தெரியல) மூன்றாவது நேர்முகம் (HR officer கூட)
இவ்ளோ தாங்க இதுக்கு தான் இவ்ளோ பில்ட் up குடுக்கிரியனு நீங்க கேக்கறது என் காதுல விழுது. இதுல highlight என்னன்னா எப்படி கிரிக்கெட்ல சேவாக் நல்லா அடிச்சி விளையாடுவர்னு நினைகிறப்ப duck அவுட் ஆனா எப்படி இருக்குமோ அப்படி தான் நானும். நல்லா பண்ணுவேன்னு பக்கத்து வீடு, கீழ் வீடு இப்படி எல்லா வீட்டு காரங்களும் காலைல வாழ்த்து சொல்லி அனுப்பினாங்க. நானும் சந்தோசமா கெளம்பினேன்.
முதல் ரவுண்டு வந்தது. நானும் இப்ப வேல செய்ற ஆபீஸ்ல எப்படி இன்டெர்வியு பண்ணகளோ அதே மாதிரி தான் இருக்கும்னு நெனச்சி நம்பி போனேன். இன்டெர்வியு வினா தாள் கைல பார்த்த உடனே எனக்கு மயக்கமே வந்திரிச்சி. பின்ன எப்படி வராம. அதுல அவங்க கேட்டது புதுசு. அப்படி இப்படி சமாளிச்சி நா எழுதிட்டேன்.
அதுல ஒரு சின்ன சந்தோசம் என்னன்னா சில கேள்விகள் எனக்கு தெரிஞ்சதாவே வந்தது. தெரிஞ்ச கேள்விக்கு விடய எழுதிட்டு, தெரியாத கேள்விக்கு "இங்கி பிங்கி" (நீங்க துப்பர சத்தம் கேக்குது) போட்டு எழுதி (20 நிமிஷத்துல ) குடுத்துட்டு வந்து வெயிட் பண்ணேன். பேசாம போகவேண்டியது தானே சொல்றிங்களா? ஒரு குருட்டு நம்பிக்கை தான். எதாவது அதிசயம் நடந்து நம்பள இரண்டாவது ரௌண்ட்க்கு கூப்பிட மாட்டங்களானுட்தான் இருந்தேன்.
அப்போ தான் அந்த கம்பெனி HR வந்தாங்க, கைல ஒரு பெரிய லிஸ்ட் வெச்சிருதாங்க. கொஞ்சம் பேர கூட்டிட்டு தனிய போனாங்க. நா நெனச்சேன், அவங்க எல்லாம் தேர்வு ஆனவங்கனு. அப்புறம் தான் தெரிஞ்சது, அவங்க எல்லோரும் பெயில் ஆனவங்கனு.
சந்தோசத்துல தல கால் புரியல, நம்ப பேர் இல்ல தான அதனால தான். கொஞ்ச நேரம் கழிச்சி இன்னொரு லிஸ்ட் கொண்டு வந்தாங்க. அதுல என் பேர் இருந்தது. அப்பவும் நா என்ன நெனச்சேன்ன, நம்பள இரண்டாவது ரௌண்ட்க்கு கூட்டிட்டு போறங்கனு. கூட்டிட்டு போன உடனேயே வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க (இதுக்கு நானே வந்திருக்கலாம்) நானே வந்திருந்த கூட பேர் சொல்றப்ப யார்னாது தெரியாம போயிருக்கும்.
நா செஞ்ச தப்பு என்னன்னா அங்க என்ன மாதிரி கேள்வி கேப்பாங்கன்னு யோசிக்காம போனது ( யோசிச்சா கிழிசிருப்பியன்னு கேக்காதிங்க )
எனவே இந்தமாதிரி போறப்ப கொஞ்சமாது படிச்சிட்டு போங்க. அங்க கேட்ட கேள்வில கொஞ்சம் சாம்பிள் இங்க. யாருக்காது பதில் தெரிஞ்ச சொல்லுங்க பாப்போம்.














என்ன பாக்கறப்பவே தல சுத்துதா. நல்லா வேணும். என்னக்கும் அப்படி தானே இருந்திருக்கும்.

No comments:
Post a Comment